
Seemaraja business sold out
சீமராஜா – வியாபாரம் முழு விபரம்
03 ஜூலை, 2018 – 19:40 IST
பொன்ராம் இயக்த்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்தை விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கிடையில் இப்படத்தின் வியாபாரத்தையும் சத்தமில்லாமல் முடித்துவிட்டனர்.
சென்னை ஏரியா உரிமையை சத்யம் சினிமாஸின் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் தம்பி அழகர் வாங்கியுள்ளார். திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவை ‘சியோன் பிலிம்ஸ்’ நிறுவனமும், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவை ‘பாஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனமும் வாங்கியுள்ளன.
வட ஆற்காடு, தென்ஆற்காடு ஏரியாக்களை ஜி.ஸ்ரீனிவாசனின் ‘எஸ்.பிக்சர்’ நிறுவனம் வாங்கியுள்ளது. செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் செண்பகமூர்த்தியின் எம்.எஸ்.எம்.மூவி டிரேடர்ஸ் உடன் இணைந்து ’24 ஏ.எம்.ஸ்டுடியோ’ நிறுவனம் வெளியிடுகிறது. சேலம் ஏரியாவை ‘ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ்’ நிறுவனமும், கோயம்பத்தூர் ஏரியாவை மன்னாரின் ‘கந்தசாமி ஆர்ட்ஸ்’ நிறுவனமும் வாங்கி வெளியிடுகின்றன.
லதா ரஜினிக்கு கோர்ட் எச்சரிக்கை சின்னத்திரையில் ரஜினி நாயகி
வாசகர் கருத்து
No comments found
டாப் 5 படங்கள்
வரவிருக்கும் படங்கள் !
- நடிகர் : ஜீவா
- நடிகை : ஷாலினி பாண்டே
- இயக்குனர் :டான் சாண்டி